இலங்கைக்கு கொக்கெய்ன் போதைக்கடத்த முயன்ற இந்திய அரசியல்வாதிகள் இருவர் கைது

Prathees
3 years ago
இலங்கைக்கு கொக்கெய்ன் போதைக்கடத்த முயன்ற இந்திய அரசியல்வாதிகள் இருவர் கைது

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படவிருந்த 360 கோடி மதிப்பிலான கொக்கைன் போதைப் பொருளை பறிமுதல் செய்த சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் இருவரும் தமிழக கடலோர பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (26 நவம்பர் 2022), ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மண்டபம்-வேதாளை சாலையில் கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்றை தடுத்து நிறுத்திய பொலிசார், 30 கொள்கலன்களில் 20 லிட்டர் கொக்கைன் மூலப்பொருள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், ராமேஸ்வரத்தை சேர்ந்த சாதிக் அலி, என்பவருக்கு சொந்தமான படகில், இந்த மூலப்பொருள், இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

போதைப்பொருளை பறிமுதல் செய்த பொலிசார், காரில் இருந்த சகோதரர்களான கீழக்கரை நகராட்சி முன்னாள் திமுக உறுப்பினர் ஜெய்னுதீன் (45), தற்போது ராமேஸ்வரம் 19வது தொகுதி திமுக உறுப்பினராக இருக்கும் சர்ப்ராஸ் நவாஸ் (42) ஆகியோரை கைது செய்தனர்.

சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 360 கோடி என கூறப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த அதிக மதிப்பு போதைப் பொருட்களை பொலிசார் கைப்பற்றியது, இதுவே முதல் முறை என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட இந்த சகோதரர்கள் சரக்கு பாரவூர்தி சேவை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் இவர்களுக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் குழுக்களுடன்; தொடர்பு உள்ளதா என மத்திய மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகள் விசாரணைகளை மேற்கொள்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4