மின்சார சீர்திருத்தங்களுக்கான நாமலின் குழுவின் பிரேரணைகள் 08ஆம் திகதி

Mayoorikka
1 year ago
மின்சார சீர்திருத்தங்களுக்கான நாமலின் குழுவின் பிரேரணைகள் 08ஆம் திகதி

இலங்கையில் மின்சாரத்துறையில் மேற்கொள்ளப்படவுள்ள சீர்திருத்தங்களை முன்வைப்பதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தொடர்பான தேசிய கொள்கை உபகுழுவின் முன்மொழிவுகள் டிசம்பர் 8ஆம் திகதி தேசிய சபையில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை கண்டறிவதற்கான தேசிய சட்டமன்ற உப குழுவின் தலைவர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த அறிக்கை கடந்த அமைச்சரவை அங்கீகாரம் பெற்றதுடன், தேசிய கொள்கை உபகுழுவின் முன்மொழிவுகளை பெற்றுக்கொள்வதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் நாமல் ராஜபக்ஷவிடம் நேற்று (29) கையளிக்கப்பட்டது.

நாளாந்தம் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய இயலாமையினால் ஏற்படும் மின்வெட்டு மற்றும் அதிகளவிலான மின் கட்டண அதிகரிப்பு உட்பட இலங்கையில் மின்சாரத்துறை எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கான தீர்வுகளை உள்ளடக்கிய பரிந்துரைகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட அறிக்கையை ஆராய்ந்த பின்னர் அது தொடர்பில் தனது யோசனைகளையும் ஆலோசனைகளையும் தேசிய சபைக்கு சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்திருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!