சர்வதேச நாணய நிதியத்தின் தீர்வுகள் சில சமயங்களில் கசப்பாக இருக்கும்! மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி

Mayoorikka
3 years ago
 சர்வதேச நாணய நிதியத்தின்  தீர்வுகள் சில சமயங்களில் கசப்பாக இருக்கும்!  மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது வைத்தியரை பார்க்கச் செல்வது போன்றது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்  இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

அது தரும் தீர்வுகள் சில சமயங்களில் விரும்பத்தகாததாக கசப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர், நிதி நல்லிணக்கத்தைப் பேணுவது இன்றியமையாதது என்றும், அதற்காக அரசியலமைப்பு ஏற்பாடுகள் போன்ற சட்ட காரணிகளால் நிதி முகாமைத்துவம் ஆதரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இலங்கை மத்திய வங்கியை அபிவிருத்தி வங்கியாகக் கருதாது அதன் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் ஆதரவளித்தாலும் இல்லாவிட்டாலும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4