பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் வைத்தியர், பொறியியலாளர், வங்கி அதிகாரி மற்றும் வர்த்தகர் கைது

Prasu
1 year ago
பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் வைத்தியர், பொறியியலாளர், வங்கி அதிகாரி மற்றும் வர்த்தகர் கைது

சைக்கிள்களில் ரோந்து சென்ற பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில்  வைத்தியர், பொறியியலாளர், வங்கி அதிகாரி மற்றும் வர்த்தகர் ஆகியோர் நேற்று முன்தினம் (28) இரவு கைது செய்யப்பட்டதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு  வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் வைத்தியர், தனியார் வங்கியொன்றின்  உத்தியோகத்தர், பொறியியலாளர் மற்றும் வர்த்தகர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நான்கு சந்தேக நபர்களில் ஒருவரின் நண்பர் ஒருவர் வெளிநாடு செல்வதால் அவர் மத்தேகொடவில்  ஏற்பாடு செய்திருந்த   மதுபான விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட பின்னர்  முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். 

இதன்போது முச்சக்கரவண்டியில் இருந்து இறங்கிய பொறியாளர் என்று கூறப்படும் நபர், “என்ன வேண்டும்” என பொலிஸாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.  ஆனால், பொலிஸார்  இது தொடர்பில் கவனத்தில் கொள்ளாது  முச்சக்கரவண்டியில் காணப்பட்டவர்களின்  தேசிய அடையாள அட்டைகளை கேட்டுள்ளனர்.

ஆனால் முச்சக்கரவண்டியில் இருந்த நால்வரும் இதற்கு ஒத்துழைக்காமல் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், முடிந்தால் அடையாள அட்டையை எடுத்துச் செல்லுமாறு பொலிஸாரிடம் சவால் விடுத்து அவர்களைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!