மின் வெட்டு தொடர்பாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வெளியிட்ட தகவல்!

Mayoorikka
3 years ago
 மின் வெட்டு தொடர்பாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வெளியிட்ட தகவல்!

டிசம்பர் மாதத்தில் இலங்கையில் சுற்றுலா வலயங்களுக்கு விசேட மின்வெட்டுத் திட்டங்களை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

சுற்றுலா அமைச்சினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள அனைத்து சுற்றுலா வலயங்களுக்கும் இரவு நேர மின்வெட்டுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


மேலும் நாடளாவிய ரீதியில் பகலில் 1 மணித்தியாலமும், இரவில் 1 மணித்தியாலம் 20 நிமிடமும் அமுல்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டு நாளை முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4