இலங்கைப் பெண்களின் பிரச்சினைகளைக் கண்டறிய அதிகாரிகள் குழுவொன்று ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணம்

Prathees
1 year ago
இலங்கைப் பெண்களின் பிரச்சினைகளைக் கண்டறிய அதிகாரிகள் குழுவொன்று ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணம்

இலங்கை பெண்கள் அங்கு எதிர்கொள்வதாக கூறப்படும் பிரச்சினைகளை கண்டறிவதற்காக  குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவொன்று ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுற்றுலா விசாவில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமானில் வசிக்கும் 77 பேரை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்னாள் செயலாளர் இ.குசான் ஓமானில் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள நிலையில், அது தொடர்பிலும்  உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர் 2022 டிசம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதேவேளை குசானுக்கு எதிராக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் கடந்த மார்ச் மாதம் உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்பட்டு, போதிய ஆதாரம் இல்லாததால் அந்த விசாரணை கைவிடப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!