கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஹெரோயினுடன் கைது

Prathees
1 year ago
கிரிக்கெட்  வீரர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்  ஹெரோயினுடன் கைது

பல்லேகல மைதானத்தில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டியில் வீரர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் 80 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரான இவர், கண்டி மத்திய சந்தைக்கு அருகில் 30ஆம் திகதி பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த இடத்திற்குச் சென்றுகொண்டிருந்த வேளையில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டிருந்த நிலையில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 21ஆம் திகதி இலங்கை-ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் பாதுகாப்புக்காக விசேட கடமைக்காக கண்டிக்கு வந்திருந்தார். வீரர்கள் தங்கியிருக்கும் Earls Regency ஹோட்டலின் குளியலறையில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபர், கடந்த வருடம் ஜூலை மாதம் 15ஆம் திகதி பொலிஸ் சேவையில் இணைந்துகொண்டார். பயிற்சியை முடித்த பின்னர், அவர் 21 மே 2022 அன்று அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவில் தனது பணிகளைத் தொடங்கினார். சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!