மூன்று பிள்ளைகளின் தாயான இலங்கை பெண் அவுஸ்திரேலியாவில் படுகொலை!

Nila
3 years ago
மூன்று பிள்ளைகளின் தாயான இலங்கை பெண் அவுஸ்திரேலியாவில் படுகொலை!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் வசிக்கும் இலங்கை தாயொருவர் தனது வீட்டில் வைத்து கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

44 வயதான மூன்று பிள்ளைகளின் தாயான நெலோமி பெரேரா படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், இக்கொலை தொடர்பில் அவரது கணவர் மெல்போர்ன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் நடந்தபோது, நெலோமி பெரேராவின் மகள் அயல் வீடுகளுக்குச் சென்று உதவி கோரியுள்ளமை CCTV கமெராக்களில் பதிவாகியுள்ளது.

நெலோமி பெரேராவின் மகள் வந்து “எனது தாய் இறந்துவிட்டார், எனது தாயார் இறந்துவிட்டார்” என்று கூறியதாக அயலவர்கள் பொலிஸாரிடம் சாட்சியமளித்துள்ளனர்.

கணவனுடன் பிரிந்து வாழ்ந்த நெலோமி தனது வீட்டின் பூட்டையும் மாற்றியுள்ளார் என்று  அயலவர்கள் பொலிஸாரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சந்தேகநபரான தினுஷ் குரேரா, நெலோமி பெரேராவின் வளர்ப்பு மகனையும் தாக்கியதாகத் தெரிவித்த மெல்பேர்ன் பொலிஸார், அவருக்கு பெரிதாக காயங்கள் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4