குருநாகலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் சூடான நிலை

Prathees
3 years ago
குருநாகலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் சூடான நிலை

இது வாழ்க்கையல்ல, வாழ்வை வெல்லும் போராட்டத்தை ஆரம்பிப்போம்” என சோசலிச வாலிபர் சங்கம் இன்று (04) மாலை குருநாகல் நகரில் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சோசலிச இளைஞர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

குருநாகல் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்னர் குருநாகல்-கொழும்பு பிரதான வீதியூடாக ஆர்ப்பாட்ட பேரணியை ஆரம்பித்தனர்.

குருநாகல் பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக, பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்ட பேரணியை இடைமறித்ததால், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் சூடான சூழ்நிலை ஏற்பட்டது.

கலகத் தடுப்புப் பிரிவினரும் வரவழைக்கப்பட்டு, பொலிஸ் வீதித் தடைகளை உடைத்து குருநாகல் ரஜபீல்ல வீதியில் நுழைந்த குழுவினர், அங்கு ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்திக் கலைந்து சென்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4