மத்தள சர்வதேச விமான நிலையம் தொடர்பாக வெளியான அதிர்ச்சித் தகவல் : ஐந்து வருடங்களில் 20 பில்லியன் இழப்பு

Prathees
1 year ago
மத்தள சர்வதேச விமான நிலையம் தொடர்பாக வெளியான அதிர்ச்சித் தகவல் : ஐந்து வருடங்களில் 20 பில்லியன் இழப்பு

மத்தள சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட 247.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான மொத்த செலவான முப்பத்தாறாயிரத்து ஐநூற்று அறுபத்து நான்கு மில்லியன் ரூபா (36,564) பயனுள்ள வகையில் பயன்படுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் (2021) மத்தள சர்வதேச விமான நிலையத்தின் இயக்கச் செலவு 2.02 பில்லியன் ரூபாவாக இருந்ததாகவும், இது இயக்க வருமானத்தை விட 21 மடங்கு அதிகம் எனவும் கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது.

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் கடந்த ஆண்டு வரிக்குப் பின்னரான நிகர இழப்பு 4.44 பில்லியன் ரூபாவாகும். 2017 முதல் 2021 வரையிலான நிகர இழப்பு 20.59 பில்லியன் ரூபாவாகும்.

மத்தள விமான நிலையத்தின் வருடாந்த பயணிகளின் எண்ணிக்கை சுமார் ஒரு மில்லியனாக இருந்தாலும், கடந்த 5 வருடங்களில் மொத்த பயணிகளின் எண்ணிக்கை 91,747 ஆகும். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்த விமானங்களின் எண்ணிக்கை 2,396 ஆகும்.

மேலும், விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக எடுக்கப்பட்ட 190 மில்லியன் டொலர் கடனுக்கான வட்டி உட்பட வருடாந்த கடன் தவணையாக 2610 மில்லியன் ரூபாவை நிறுவனம் செலுத்தியுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செயல்பாடுகள் மற்றும் மேம்பாடுகளை மிகவும் திறமையாகவும், செலவு குறைந்ததாகவும் செய்ய கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று தணிக்கை பரிந்துரைத்துள்ளது.

விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனம் தொடர்பாக 2021 ஆம் ஆண்டு தொடர்பாக வெளியிடப்பட்ட ஆண்டறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!