அயல்நாட்டில் வாழும் தமிழ் எழுத்தாளர்கள் & பதிப்பாளர்களுக்கு மாபெரும் வாய்ப்பு

2023, ஜனவரி 16,17,18 ஆகிய தேதிகளில், தமிழக அரசு சார்பில் முதல் முறையாக சென்னையில் நடைபெற உள்ள பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் அமெரிக்கா - கனடா, ஐரோப்பா, அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்காக தனித்தனியாக அரங்குகள் அமைத்து, தமிழக அரசு அதை இலவசமாக வழங்க உள்ளது.
இந்த அரங்குகளில் அந்தந்த நாடுகளைச் சேர்ந்த தமிழ் படைப்பாளர்களின் படைப்புகளை காட்சிக்காக வைக்கலாம். அதோடு உலக புத்தகக் கண்காட்சிக்கு வரும் வெளிநாட்டு பதிப்பாளர்கள் மற்றும் உள்நாட்டு பதிப்பாளர்களிடம் உங்கள் நூல்களுக்கான பதிப்புரிமையை விற்கலாம். பிறகு தகுதியான நூல்களுக்கு அயல் மொழிகளில் வெளியிடுவதற்கான கிராண்ட் ( Grant- புத்தக வெளியீட்டு மானியம்) கேட்டு விண்ணப்பித்துப் பெறலாம். இதன்மூலம் இலக்கிய மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றங்கள் நடப்பதோடு, சிறந்த வணிக வாய்ப்புகளும் உருவாக உள்ளன.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது.
உங்கள் நூல்கள் இடம்பெற வேண்டுமானால் நூல்களை நாங்கள் குறிப்பிடும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அதோடு நீங்கள் சார்ந்த நாடுகளின் பிரதி நிதிகளாக பங்கேற்கலாம்.
உங்கள் விருப்பம் எதுவானாலும், +91 9940446650 என்ற எமது வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் அனுப்புங்கள்.
#chennai_international_bookfair
#CIBF
#CIBF2023
இப்படிக்கு
புலம்பெயர் தமிழர்களுக்கான அரங்குகள் ஒருங்கிணைப்புக் குழு
செந்தில்நாதன்
(ஆழி பதிப்பகம்)
கோ.ஒளிவண்ணன் (எமரால்ட் பதிப்பகம்)
மு.வேடியப்பன்
டிஸ்கவரி புக் பேலஸ்




