நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற முயன்றவர்களை கிழக்கு கடற்பரப்பில் கைது செய்த கடற்படையினர்!
Mayoorikka
2 years ago

நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற முயன்றதாக சந்தேகிக்கப்படும் 20 பேர் கிழக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை ஃபவுல் முனைக்கு அப்பால் கிழக்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரும் உள்ளடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட இருபது பேர் களவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு, மூதூர், யாழ்ப்பாணம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த குழுவும், பலநாள் திவாரக் கப்பலும் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.




