கர்ணனைப் போல் ரணிலும் இருக்கும் இடம் சரியில்லை: தர்மத்தின் வழி சென்று அவரை நாம் எதிர்க்கின்றோம்! இராதாகிருஷ்ணன்

Mayoorikka
3 years ago
 கர்ணனைப் போல் ரணிலும் இருக்கும் இடம் சரியில்லை: தர்மத்தின் வழி சென்று அவரை நாம் எதிர்க்கின்றோம்! இராதாகிருஷ்ணன்

கர்ணன் நல்லவர், சிறந்த கொடையாளி, ஆனாலும் துரியோதனன் பக்கம் நின்றதால் அவரை வதம் செய்ய வேண்டியநிலை கிருஷ்ண பகவானுக்கு ஏற்பட்டது. 

அதுபோலவே ரணில் விக்கிரமசிங்க நல்லவர். சிறந்த அறிவாளி. ஆனாலும் அவர் தற்போது நிற்கும் பக்கம் தவறானது. 

எனவேதான் தர்மத்தின் வழி சென்று அவரை நாம் எதிர்க்கின்றோம் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வட்டவளையில் நேற்று (04) இடம்பெற்ற மலையக மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"இலங்கையின் பொருளாதாரம் வங்குரோத்து நிலைக்கு வருவதற்கு ராஜபக்ச குடும்பமே பிரதான காரணம். சீனாவிடமிருந்து பெருந்தொகை கடன்பெற்று, அவை தேவையற்ற அபிவிருத்திகளுக்கு பயன்படுத்தப்பட்டன. காலியில் ஒரு துறைமுகம் இருக்கும் நிலையில், அதனை மேம்படுத்தாமல் ஹம்பாந்தோட்டையில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது. இதனால் என்ன பயன்?

போராட்டக்காரர்களுக்கு இடையூறு விளைவிக்கப்படமாட்டாது என பிரதமரான பின்னர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார். ஆனால் ஜனாதிபதியான பிறகு மறுநொடியே போராட்டக்காரர்களை அகற்றினார். சொல் ஒன்று செயல் வேறுவடிவம் என்பதை அவர் நிரூபித்தார். உண்மையின் வழி நிற்கவில்லை.

ரணில் விக்கிரமசிங்கவும் தற்போது இருக்கும் இடம் சரியில்லை. நாம் தர்மத்தின் பக்கம்தான் நிற்போம். ரணிலும், மஹிந்தவும் தர்மம் செய்யவில்லை. எனவே, ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் தேர்தல் அவசியம்.

அதேவேளை, மலையக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து செயற்படும். தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க ஒன்றிணைந்து பயணிப்போம். அதற்கான சூழலை ஏற்படுத்தும் நடவடிக்கையில்  செயலாளர் நாயகம் விஜயசந்திரன் ஈடுபட்டுள்ளார்." என்று அவர் குறிப்பிட்டார்.

in

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4