சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 20 பேர் திருகோணமலை கடற்பரப்பில் வைத்து கைது
Kanimoli
2 years ago

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 20 பேர் திருகோணமலை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு, மூதூர், யாழ்ப்பாணம் மற்றும் நீர்கொழும்பைச் சேர்ந்தவர்களாவர்.
இன்று அதிகாலை கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் குறித்த 20 பேரும் கைதானதோடு அவர்கள் பயணித்த படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அவர்களில் இந்த மனித கடத்தல் நடவடிக்கையை முன்னெடுத்த 6 உட்பட 16 ஆண்களும் பெண்னொருவரும் அடங்குகின்றனர்.
குறித்த 20 பேரில் 18 வயதுக்கு குறைந்த மூவரும் அடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
அவர்கள் திருகோணமலை துறைமுக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.



