இலங்கையில் முதலிடுவதற்கு முன்னர்  4 நிபந்தனைகள் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தும்  தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு 

Prathees
1 year ago
இலங்கையில் முதலிடுவதற்கு முன்னர்  4 நிபந்தனைகள் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தும்  தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு 

இலங்கையில் எந்தவொரு முதலீட்டையும் மேற்கொள்வதற்கு முன்னதாக 4 நிபந்தனைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்று தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு கோரியுள்ளது.

அரசியல் தீர்வு மற்றும் இனப்படுகொலை குற்றங்கள் தொடர்பில் நீதிக்கான உத்தரவாதம் ஆகியவற்றை, புலம்பெயர் தமிழர்கள் கோருவதாக  கனடாவை தளமாகக்கொண்ட, உலகளாவிய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு, இன்று அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், ஈழத் தமிழ் புலம்பெயர்ந்தோர்  ஒரு மில்லியனுக்கும் அதிகமான பலம் கொண்டவர்களாக உள்ளனர். புலம்பெயர்ந்தோர், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளவேண்டுமாயின், 4 நிபந்தனைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்று தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு கோரியுள்ளது.

1)தமிழர்களுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் நிலவும் பிரச்சனைக்கு அரசியல் தீர்வை காணும் வகையில், தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கையொப்பமிடப்பட்ட உடன்படிக்கையின் கீழ், இலங்கையின் பிணையெடுப்பிற்காக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடமிருந்து எந்தவொரு வெளிநாட்டு முதலீடுகளும் கண்டிப்பாக நிபந்தனையுடன் இருக்க வேண்டும். அரசியல் தீர்வு என்பது ஈழத்தமிழ் மக்களின் அரசியல் நிலையை தீர்மானிப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பு, சர்வதேச சட்டத்தின் கீழ் அவர்களின் உள்ளார்ந்த சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொடுத்தல் என்பவற்றை உள்ளடக்கவேண்டும்.

சுதந்திரத்திற்குப் பிறகு தமிழர்களுக்கும் இலங்கைக்கும் இடையிலான  எல்லா உடன்படிக்கைகளும், ஒருதலைப்பட்சமாக இலங்கை அரசாங்கங்களினால்;  முறிக்கப்பட்டது.
எனவே எதிர்கால ஒப்பந்தம் நிரந்தர நடுவர் நீதிமன்றம் போன்ற நடுநிலை மையங்களால், சட்;டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

2. இலங்கைத் தமிழர்களுக்கான தீர்வு, கனடாவில் கியூபெக், இங்கிலாந்தில் உள்ள ஸ்கொட்லாந்து அல்லது சுவிஸ் கூட்டமைப்பு போன்ற கூட்டாட்சித் தீர்வு இடைக்கால ஆட்சிக் கட்டமைப்பை போன்று அமையவேண்டும்.

3. கனேடிய தமிழ் காங்கிரஸ் பிரதிநிதிகள், தமிழீழத்தின் இறையாண்மையை கீழறுக்கும் முதலீடுகளில் இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைக்க முயற்சிப்பதை தாம் கண்டிப்பதாக கூட்டமைப்பு கூறியுள்ளது.
அவர்களின் முயற்சி, தமிழர்களுக்கு எந்த விதமான நீதியையும் அல்லது சுயநிர்ணய உரிமையையும் பெற்றுக்கொடுக்காது, இலங்கையை மீட்பதற்கு தமிழர் பணத்தை வழங்க வழங்கும் முயற்சியாகவே அமைந்துள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்காக தமிழர்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுவதற்கு இன்னுமொரு புதிய முயற்சியை இலங்கை மேற்கொண்டு வருகிறது. எனினும் அதற்கு இனி இடம்தரமுடியாது என்று உலகளாவிய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

4. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தின் மூலம் கட்டாயப்படுத்தப்பட்ட கலப்பு நீதிமன்றத்தை சர்வதேச சமூகம் அமுல்படுத்த வேண்டும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அனுப்ப வேண்டும் மற்றும் தமிழீழத்தின் சுயநிர்ணய உரிமைகளை மதிக்க வேண்டும் என்றும் கூட்டமைப்பு கூறியுள்ளது.

இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்தின் பொய்யான வாக்குறுதிகளில் வீழ்ந்துவிட வேண்டாம் என புலம்பெயர்ந்த தமிழ் மக்களை உலகளாவிய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு கேட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!