மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை
Kanimoli
2 years ago

காலி - அக்மீமன, மடோல பிரதேசத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார்
இந்த கொலைச் சம்பவம் இன்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்த பெண்ணின் சடலம் வீட்டின் சமையலறையிலும், கணவரின் சடலம் வீட்டின் அறையொன்றிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளமையும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



