இன்றைய வேத வசனம் 06.12.2022: நீ ஆயத்தப்படு, உன்னுடனேகூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து

Prathees
3 years ago
இன்றைய வேத வசனம் 06.12.2022: நீ ஆயத்தப்படு, உன்னுடனேகூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து

பலர் தன்னுடைய வாழ்க்கையில் நல்ல வேலையில் அமர்ந்து, சந்தோஷமாய் வாழ்க்கையை அனுபவிப்தற்கே, பட்டம் பெற்று, உயர் படிப்புகள் படிக்கிறார்கள்.

ஆனால் நல்ல கல்வி, நல்ல அந்தஸ்து, நல்ல குடும்பம் போன்ற பல நன்மைகள் தன்னை சூழ்ந்திருக்க, ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து வாழ்க்கையை அனுபவிக்காமல், ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய, நிராகரிக்கப்பட்டவர்களுக்கு நன்மை செய்ய, தன் குடும்பத்தோடு 1965 ஆம் ஆண்டு இந்தியாவின் ஒடிஷா மாநிலத்திற்கு வந்தார் கிரஹாம் ஸ்டெயின்ஸ்.

ஒரு மிஷனெரியாக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து தொழுநோய் உள்ள மக்கள் மத்தியில் ஊழியம் செய்தார். பல எதிர்ப்புகள், போராட்டங்கள் மத்தியிலும், அந்த பாதிக்கப்பட்ட நம்பிக்கையில்லாத வியாதியின் வேதனையில் வாடும் மக்களுக்கு சமுதாயப் பணியை செய்து வந்தார்.

கணவன், மனைவி, மகள், இரண்டு சிறு மகன்கள் என அழகான குடும்ப வாழ்க்கையை அந்த மக்களோடு, மக்களாக சேர்ந்து வாழ்ந்து சேவை செய்து வந்தார். 

யாருமே சகிக்க முடியாத வியாதியில் வாடும் மக்களுக்கு சுகமான வாழ்க்கை வாழ தன்னையே அர்ப்பணித்து சேவை செய்து வந்தார். அவரின் சேவையை தவறாக புரிந்து கொண்ட ஒரு கூட்டம், ஒரு நாள் நள்ளிரவில் ஜீப்பில் அவரும், அவருடைய இரண்டு மகன்களோடு தூங்கிக் கொண்டிருக்கும் போது உயிரோடு எரித்துக் கொன்றனர்.

இந்த சம்பவம் இந்தியாவை மட்டும் அல்ல, உலக நாடுகளையே உலுக்கியது. 1999 ஆம் ஆண்டு ஜனவரி 23 ம் தேதி அன்று முழு தேசத்தை உறைய வைத்த செய்தி அது. அந்த ஏழை தொழுநோயாளிகளுக்காக சேவை செய்து, அந்த மக்கள் மத்தியில் தன் உயிரையே விட்டார்.

இப்படி சிலரின் தியாகத்தால் தான் பலர் சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்றும் பலருக்கு தங்கள் comfortable zone - யில் இருந்து வெளியே வர மனம் இல்லை.

ஒரு கிரஹாம் ஸ்டெயின்ஸ் செய்த தியாகத்தால் பலர் இன்றைக்கு சந்தோஷமாய் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கோ பிறந்து இந்தியாவிற்காக தியாகம் செய்த மிஷினெரிகள் இரத்த சாட்சியாய் மரித்தவர்கள் பலர்.

உன் தேசத்திற்கு உன்னுடைய பங்கு என்ன? உன்னுடைய சொந்த இனத்திற்கு உன்னுடைய தியாகமான செயல் என்ன?

உன்னுடைய தியாகமில்லாமல், உன் சமுதாயத்தில் விடியல் இல்லை. இந்த கடைசி நாட்களில் நீ எழும்ப வேண்டும். இந்த பரந்த நாட்டில், உன்னைப் போன்ற வாலிபர்கள் எழும்பும் போது மாற்றம் உண்டாவது நிச்சயம்!

எசேக்கியேல் 38:7
நீ ஆயத்தப்படு, உன்னுடனேகூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து; நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு.

ஆமென்!!! அல்லேலூயா!!

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4