ருஹுனு கல்வியியல் கல்லூரியில் மோதல் தொடர்பில் கல்வியமைச்சு அவதானம்
Prathees
2 years ago

ருஹுனு கல்வியியல் கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற மாணவர் மோதல் தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
ஆசிரியர் கல்வியில் ஈடுபடும் மாணவர்களின் ஒழுக்கத்தை பேணுவதற்கு கல்வி அமைச்சு அதிகபட்ச நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என கல்வி ஆணையாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்தார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 54 மாணவர்களின் கல்வியை இரத்து செய்யவும், ருஹுனு கல்வியியல் கல்லூரி நடத்தும் ஒழுக்காற்று விசாரணைக்கு மேலதிகமாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் தனியான விசாரணை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



