இரகசியமான முறையில் மூன்று விபசார விடுதிகளை நடத்தி வந்த சிப்பாய் ஒருவர் கைது

Kanimoli
3 years ago
இரகசியமான முறையில் மூன்று விபசார விடுதிகளை நடத்தி வந்த சிப்பாய் ஒருவர் கைது

இரகசியமான முறையில் மூன்று விபசார விடுதிகளை நடத்தி வந்த கொமாண்டோ படையின் முன்னாள் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் இவ் விடுதி அமைக்கப்பட்டுள்ளது.

இவர் மாத்தளை சந்தி பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போதே சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக அநுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு அவரிடமிருந்து 11 கிராம் 170 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

42 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அநுராதபுரம் நகரிலுள்ள விபசார விடுதிகளிலும் மசாஜ் நிலையங்களில் பணிபுரியும் பெண்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்காக அந்த இடங்களுக்கு வரும் ஆண்களை இலக்கு வைத்து இந்த ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்யப்படடுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4