இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நடந்த விபத்தில் இராணுவ வீரர் பலி

Kanimoli
3 years ago
இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நடந்த விபத்தில் இராணுவ வீரர் பலி

கொக்காவில் பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நடந்த விபத்தில் இராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை நடந்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இராணுவ தாங்கி ஒன்றில் மோதுண்டு அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

அதில் படுகாயமடைந்த இவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். தம்புத்தேகம சிறிமாபுர பிரதேசத்தை சொந்த இடமாக கொண்ட 19 வயதான இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து சம்பந்தமாக மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4