சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க திட்டம்!
Mayoorikka
2 years ago

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
மசகு எண்ணெய் ஏற்றிய இரு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 2 இலட்சம் மெட்ரிக் தொன் மசகெண்ணெய் நாட்டிற்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
மசகெண்ணெய் அடங்கிய மற்றுமொரு கப்பல் இன்னும் சில தினங்களில் நாட்டை வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.



