2022 மார்ச் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக, வர்த்தக பொருள் ஏற்றுமதி வருவாய் வீழ்ச்சியடைந்துள்ளது!

Mayoorikka
1 year ago
2022 மார்ச் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக, வர்த்தக பொருள் ஏற்றுமதி வருவாய் வீழ்ச்சியடைந்துள்ளது!

2022 மார்ச் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக, வர்த்தக பொருள் ஏற்றுமதி வருவாய் ஆண்டு புள்ளி அடிப்படையில் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் ஆடை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்தமையே இதற்கு முக்கிய காரணம் என இலங்கை மத்திய வங்கி குறிப்பிடுகின்றது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில், சரக்கு ஏற்றுமதி வருமானம் 1,192 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அதே வருமானம் 1,051 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த வருடத்தின் ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் ஒக்டோபர் மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 11.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதேவேளை, வெளிநாட்டு ஊழியர்களின் பணவனுப்பல்கள் இந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் வழமைக்கு திரும்பியுள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் வெளிநாட்டு ஊழியர்களின் பணம் மூலம் 317 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் 355 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதேபோல், சுற்றுலா வருமானத்தின் மூலம் கடந்த ஒக்டோபர் மாதம் 76 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாத சுற்றுலாத்துறை வருமானத்தின்படி 27.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகரிப்பு என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இவ்வருடம் ஜனவரி முதல் ஒக்டோபர் வரையில் வெளிநாட்டு ஊழியர்களின் பணம் மூலம் சுமார் 03 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதுடன் அக்காலப்பகுதியில் சுற்றுலா வருமானத்தின் ஊடாக ஈட்டப்பட்ட வருமானம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.

இதேவேளை, 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் முதலீட்டுப் பொருட்களின் இறக்குமதிச் செலவு கடந்த வருடத்தின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 42.5 வீதத்தால் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!