கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அத்தியாவசியமான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு!

Mayoorikka
3 years ago
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அத்தியாவசியமான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அத்தியாவசியமான மருந்துப் பொருட்கள் உட்பட 80 க்கு மேற்பட்ட மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக குறித்த வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில வாரங்களாக வைத்தியசாலையில் மருந்துத் தட்டுப்பாடு காணப்படுவதாகவும், சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளிகள் பெருமளவு மருந்துப் பொருட்களை வெளியில் வாங்கும்படி வைத்தியர்கள் மருந்துச்சீட்டில் எழுதிக்கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையை பொறுத்தவரையில், பெரும்பாலும்  வறுமைக்கோட்டின் கீழுள்ள நோயாளர்களே சிகிச்சைக்காக வருகை தருகின்றனர்.

இந்நிலையில் அந்நோயாளர்களுக்கான மருந்துகளை வெளியில் கொள்வனவு செய்யுமாறு வைத்தியர்களால் சிபாரிசு செய்யப்படுவதால், பலர் தங்களுக்கான மருந்துகளை கொள்வனவு செய்ய முடியாமல் திரும்பிச் செல்கின்ற நிலையே காணப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.

மருந்து தட்டுப்பாடு நிலைமையானது நாடு முழுவதற்குமான பிரச்சினையாக காணப்படுவதால் பொதுமக்கள் அதிகபட்சம் வருமுன் காக்கும் முன்னாயத்த நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4