கப்பல்களில் வரும் சுற்றுலாப் பயணிகளால் யாலாவின் வருமானம் அதிகரிப்பு
Prathees
2 years ago

இரண்டு சொகுசு கப்பல்கள் மூலம் யால பூங்காவிற்கு வெளிநாட்டவர்கள் வருகை தந்ததன் மூலம் வனஜீவராசிகள் திணைக்களம் சாதனை வருமானத்தை ஈட்டியுள்ளது.
நவம்பர் 30 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த கப்பலில் 551 வெளிநாட்டவர்கள் யால தேசிய பூங்காவிற்கு விஜயம் செய்ததாக வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
110 வாகனங்களில் வந்து யால பூங்காவை பார்வையிட்ட இவர்கள் அன்றைய தினம் 62 இலட்சத்து 19 ஆயிரத்து 560 ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளனர்.
டிசம்பர் 05 ஆம் திகதி வந்த கப்பலில் 86 சுற்றுலாப் பயணிகள் யால தேசிய பூங்காவிற்கு 18 வாகனங்களில் வருகை தந்ததாக வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி அன்று அந்த வெளிநாட்டவர்களிடம் இருந்து கிடைத்த வருமானம் 81,981 லட்சமாகும்.



