போதைக்கு அடிமையான பாடசாலை மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Prathees
3 years ago
போதைக்கு அடிமையான பாடசாலை மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி பாடசாலை மாணவிகளும் போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா கூறுகிறார்.

போதைப்பொருள் பழக்கம் முன்னர் நகர்ப்புற பாடசாலைகள் தொடர்பில் மாத்திரம் பதிவாகியிருந்த போதிலும், தற்போது அது கிராமப்புற பாடசாலைகளுக்கும் பரவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

13,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரின் போதைப் பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் அனாதை இல்லங்களில் தங்கியுள்ளனர்.

அவர்களில் பலர் துஷ்பிரயோக வழக்குகள் காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற வருவதாகவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் கூறும் நிபுணர் கலாநிதி தீபால் பெரேரா இதனைத் தடுப்பதற்கு வலையமைப்புத் திட்டமொன்று அவசியம் எனத் தெரிவித்தார்.

குறிப்பாக இந்த குழந்தைகளை காப்பாற்ற போராட வேண்டும்.இல்லையென்றால் நமக்கு ஒரு நாடு இருக்காது என  குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4