பொலிஸ் வேடமிட்டு வீட்டுக்குள் நுழைந்த 3 பேர் கைது
Prathees
2 years ago

பொலிஸார் எனக் கூறி கேகாலை, கலிகமுவ பிரதேசத்தில் வீடொன்றிற்குள் நுழைந்து 18 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்களை கொள்ளையடித்த சந்தேக நபர்களை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவர் வீட்டுக்குள் புகுந்து தனது சொத்துக்களை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இதுவாகும்.
சந்தேக நபர்கள் தன்னை மண்டியிட வைத்து தங்கப் பொருட்கள், கையடக்கத் தொலைபேசி மற்றும் மூன்று இலட்சத்து 55 ஆயிரத்து 500 ரூபா பணத்தையும் திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.



