பூஸ்ஸ சிறைச்சாலையில் 5 கையடக்கத் தொலைபேசிகள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிப்பு
Prathees
2 years ago

பூஸ்ஸ சிறைச்சாலையின் இரண்டாவது நுழைவாயிலுக்கு அருகில் 05 சிறிய கையடக்கத் தொலைபேசிகள்இ 05 சார்ஜர்கள் மற்றும் சில சிம் அட்டைகள் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பூஸ்ஸ சிறைச்சாலை வளாகத்தில் உள்ள வடிகால் ஒன்றை கைதிகள் திருத்திக் கொண்டிருந்த போதுஇ அவர்களுக்குப் பொறுப்பான சிறைச்சாலை அதிகாரிகள் கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட சாதனங்களைக் கண்டுபிடித்ததாக பூஸ்ஸ சிறைச்சாலை தெரிவித்துள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைக்காக சிறைச்சாலை தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.



