வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்கள் கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழை வைத்திருக்க வேண்டிய தேவை நீக்கம்

Kanimoli
1 year ago
  வெளிநாடுகளிலிருந்து  வருகை தருபவர்கள் கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழை வைத்திருக்க வேண்டிய தேவை நீக்கம்

  வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருகை தருபவர்கள் கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழை வைத்திருக்க வேண்டிய கட்டாயத் தேவை நீக்கப்பட்டுள்ளது. இத்தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இன்று (டிச. 07) முதல் இலங்கைக்கு விமான நிலையம் அல்லது துறைமுகம் வழியாக வரும் எவரும் கொவிட் தடுப்பூசி அட்டையை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், வெளிநாட்டிலிருந்து வரும் பிரஜைகள், சுற்றுலாப் பயணிகள், இலங்கைக்கு வந்த பின்னர் கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டால் தனிமைப்படுத்தலுடன் சிகிச்சைகளையும் பெற்றுக் கொள்வது கட்டாயமானதாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!