சுவிஸில் மாற்றமடைந்து வரும் பொதுப் போக்குவரத்து டிக்கட் முறை

சுவிஸில் மாற்றமடைந்து வரும் பொதுப் போக்குவரத்து டிக்கட் முறை – சுவிட்சர்லாந்தில் பொதுப் போக்குவரத்து டிக்கட் முறைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பஸ், ரயில் அல்லது ட்ராமில் பயணம் செய்வதற்கு டிக்கட்டுகளை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது.
எதிர்வரும் காலங்களில் ஸ்மார்ட் போன்களில் டிக்கட்களை கொள்வனவு செய்ய முடியாதவர்கள் திண்டாட நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மரபு ரீதியாக அச்சிட்டு வழங்கப்படும் டிக்கட்டுகள் மருவத் தொடங்கியுள்ளன.
சுவிஸில் மாற்றமடைந்து வரும் பொதுப் போக்குவரத்து டிக்கட் முறை
எதிர்வரும் காலங்களில் முழுமையாகவே இந்த அச்சிட்டு வழங்கப்படும் டிக்கட்டுகள் பாவனையில் இல்லாது போய்விடும் எனவும், டிஜிட்டல் வழி டிக்கட்கள் மட்டும் விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தங்களது அலைபேசிகளில் பொதுப் போக்குவரத்து தொடர்பான செயலிகளை பயன்படுத்துவோர் சவால்களை எதிர்நோக்கப் போவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், அலைபேசி செயலிகளை பயன்படுத்த தெரியாத சிரேஸ்ட பிரஜைகள் குறிப்பாக ஓய்வூதியம் பெற்றுக் கொண்டவர்கள் பொதுப் போக்கவரத்தில் பயணம் செய்ய டிக்கட்களை கொள்வனவு செய்வதில் சிரமங்களை எதிர்நோக்க நேரிடலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



