சடுதியாக அதிகரித்த ஒரு கிலோ ஆரஞ்சு பழத்தின் விலை
Prabha Praneetha
2 years ago

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ ஆரஞ்சு பழத்தின் விலை 1,990 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இறக்குமதி செலவு மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக பழ இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன், இறக்குமதி செய்யப்பட்ட மூன்று ஆரஞ்சுகள் 100 முதல் 200 ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டது.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஆரஞ்சுகள் ஏற்றுமதி செய்யப்படுவதால் இறக்குமதி செய்யப்பட்ட ஆரஞ்சுகளே இலங்கை சந்தையில் அதிகம் விற்பனையாகின்றன.
இதனால் 2000 ரூபாய்க்கு ஆரஞ்சு பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.



