மண்டோஸ் புயல் காரணமாக கடல் உட்புகுவதாக கரையோர மக்கள் அச்சம்!
Mayoorikka
2 years ago

தற்போது வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கின்ற மண்டோஸ் புயல் ஆனது சூறாவளியாக பரிணமித்து தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
இதன் காரணமாக பலத்த மழை பெய்வதுடன் பலத்த காற்று வீசக் கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது. மேலும் புயல் காரணமாக மாசடைந்த காற்று துகள்கள் வளிமண்டலத்தில் கலப்பதனால் வளிமண்டலம் மேகமூட்டமாக காணப்படும்.
எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதுடன் வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திருகோணமலையில் இப்போது கடல் நீர் அலைகள் ஊருக்குள் வந்த வண்ணம் உள்ளதாக அங்கே உள்ள செய்திகள் வந்து உள்ளது.
முல்லைதீவு செம்மலைப்பகுதியில் கடல் உட்புகுவதாக தகவல் மண்டாஸ் புயலின்விளைவாக இருக்கலாம் என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.



