அகவை 54 இல் கால் பதிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்!

யாழ், கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்றைய தினம் 54வது அகவையில் கால் பதிக்கின்றார்
நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக 2010ஆண்டு தமிழ் மக்களின் வாக்குரிமை மூலம் மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்ட பின் மக்கள் மனதில் உரிமையின் அடையாளமாக வாழ்ந்து கொண்டு தனக்கான ஒர் தனி இடத்தை பிடித்திருக்கும் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
இவர் 2015 ஆண்டு இடம் பெற்ற பாராளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்ட தேர்தல் தொகுதியில் அதிக விருப்பு(72258) வாக்குகளை பெற்றிருந்த சிவஞானம் சிறீதரன்
2020 ஆண்டு இடம் பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 35884 வாக்குகளை பெற்று மூன்றாவது முறையாகவும் மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றில் தன் குரலை தாயகம், தேசியம், சுயநிர்ணயம் எனும் தமிழரின் உரிமைக் கோசத்தை மக்களுக்காக ஒலிக்கச் செய்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.



