சீனாவிற்கு ஆதரவாகவும் சாணக்கியனுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள்!
Mayoorikka
2 years ago

சினாவிற்கு ஆதரவு தெரிவித்து ‘கோ ஹோம் சீனா’ என்ற கருத்துக்கு எதிராக கொழும்பில் போராட்டம் ஒன்று தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நவ ஜனதா பெரமுன குழுவினர் தற்போது கொழும்பிலுள்ள சீன தூதரகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் ‘கோ ஹோம் சீனா’ என்று சீனாவிற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நவ ஜனதா பெரமுன குழுவினர் இன்று போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதன்போது தாம் சீனாவை ஆதரிப்பதாகவும் சாணக்கியனின் கருத்தை எதிர்ப்பதாகவும் தெரிவித்து பதாகைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



