இலங்கையில் அதிகரிக்கும் போதைப் பொருள் பாவனை: லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் வைத்தியர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Mayoorikka
2 years ago

இலங்கையில் இளம் பெற்றோர்கள் போதைப்பொருளிற்கு அடிமையாகும் எண்ணிக்கை அதிகரிக்கின்றது என லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் வைத்தியர் தீபல் பெரேரா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட இருபது முதல் முப்பது வீதமான பெற்றோரின் பிள்ளைகள் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினை குறித்து உடனடியாக கவனம் செலுத்தி அதற்கான தீர்வொன்றை காணவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலை வோர்ட்களிற்கு செல்லும்போது இதனை நான் அவதானித்துள்ளேன் நோயாளிகளின் விபரங்களை அடிப்படையாக வைத்து நோயாளர்களின் விபரங்களை என்னால் பெறமுடிந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



