ஐந்தாம் தர புலமைப் பிரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகள் கருத்தரங்குகளுக்கு தடை! உத்தரவை மீறினால் கடும் தண்டனை
Mayoorikka
2 years ago

நடைபெறவிருக்கும் ஐந்தாம் தர புலமைப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலதிக வகுப்புக்களை ஏற்பாடு செய்தல் மற்றும் அதனை நடத்துதல், கருத்தரங்குகளை நடத்துதல் மற்றும் மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தனி நபரோ அல்லது நிறுவனமோ தடை உத்தரவை மீறினால், மேற்கொண்டால் அவர் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக கருதப்படுவார் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.



