கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டாவது பெரிய தங்கச் சோதனை: 22 கிலோ கிராம் தங்கத்துடன் ஐந்து போர் கைது

Prathees
1 year ago
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டாவது பெரிய தங்கச் சோதனை: 22 கிலோ கிராம் தங்கத்துடன் ஐந்து போர்  கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க வரலாற்றில் இரண்டாவது மிகப் பெரிய தங்கச் சோதனை இன்று இடம்பெற்றுள்ளது.

அங்கு கண்டெடுக்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு 40 கோடி ரூபாய்க்கு மேல்.

இந்தச் சுற்றிவளைப்பின் போது, ​​சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வந்த 22 கிலோ கிராம் 24 கரட் தங்கத்துடன், ஐந்து இலங்கை விமானப் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய உளவுத்துறை அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது.

சந்தேகநபர்கள் இந்த தங்கத்தை பூச்சாக தயார் செய்து, உள்ளாடையில் பூசி, 24 காரட் கொண்ட முடிக்கப்படாத தங்க நெக்லஸ்களை கழுத்தில் அணிந்து கொண்டு சுங்க அதிகாரிகளை தவறாக வழிநடத்த முயன்றுள்ளனர்.

இந்த தங்கம் இந்தியாவின் சென்னையில் இருந்து இந்த நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் தங்கம், நெக்லஸ்கள், மோதிரங்கள், வளையல்கள், 30 ஆண்களின் உள்ளாடைகள் பூச்சு செய்யப்பட்டு உணவு தயாரிக்கும் இயந்திரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை, சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!