அதிக வரி விதிப்பால் நாட்டின் ஏற்றுமதி வருமானமும் ஆபத்தில்! பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்
Prathees
2 years ago

ஏற்றுமதிக்கு வரி விதிப்பதன் மூலம் நாட்டின் ஏற்றுமதி வருமானத்தைக் கூட இழக்கும் அபாயம் பாரியளவில் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இப்பிராந்தியத்தில் போட்டி நிலவும் நாடுகளில் ஏற்றுமதி வரி குறைவாக இருப்பதே இதற்கான காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
30 சதவீத வரி மூலம் விரும்பிய இலக்குகளை அடைய முடியும் என்ற நிலையில், தொழில் வல்லுநர்களுக்கு 36 சதவீத வரி விதிப்பது நியாயமற்றது என்றார்.
இதேவேளை, பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் இன்று பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஆதரவாக 82 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் கிடைத்தன.
உள்ளூர் வருமான வரி சட்டத் திருத்த மசோதாவும் இன்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.



