சுவிஸில் 20 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவினை எதிர்பார்க்க முடியும்-காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை

Prasu
1 year ago
சுவிஸில் 20 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவினை எதிர்பார்க்க முடியும்-காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தில் பனிப்பொழிவு தொடர்பில் எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் அநேக பகுதிகளில் பனிப்பொழிவினை எதிர்பார்க்க முடியும் என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

3 சென்றி மீற்றர் முதல் 20 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என தெரிவித்துள்ளது. 

இந்த பனிப்பொழிவுடனான வானிலை எதிர்வரும் நாட்களுக்கும் தொடரும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வெயிலுடனான காலநிலையை எதிர்பார்க்க முடியும் பனிச்சறுக்கு விளையாட்டுக்கு உசிதமானதாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.