மழையுடன் கூடிய குளிரான காலநிலை: வட மாகாணத்தில் நூற்றுக்கணக்கான் கால்நடைகள் உயிரிழப்பு!
Mayoorikka
2 years ago

மழையுடன் கூடிய குளிரான காலநிலையினால் வடக்கு மாகாணத்தில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரி வைத்தியர் ச. சுகிர்தன் தெரிவித்தார்.
பலத்த காற்று மற்றும் குளிர்காரணமாக வடக்கு மாகாணத்தில் 300ற்கும் மேற்பட்ட மாடுகளும் 180ற்கும் மேற்பட்ட ஆடுகளும் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை யாழ் மாவட்டத்தில் 80ற்கும் மேற்பட்ட ஆடுகளும் 20 தொடக்கம் 30ற்கு மேற்பட்ட மாடுகளும் உயிரிழந்துள்ளன.
சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கலாம் என்பதால் கால்நடை வளர்ப்போர் கால்நடைகளை மிகவும் அவதானமாக பாதுகாக்குமாறும் இவ் இறப்பு இன்னும் கூடலாம் என வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செல்லப்பிராணிகளை பாதுகாப்பான இடங்களில் வைத்துக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்..



