பார்வையற்ற தாய் வீட்டில் இருந்த போது 17 வயது மாணவனால் சிறுமி துஷ்பிரயோகம்

பார்வையற்ற தாய் வீட்டில் இருந்த போது வாட்ஸ் அப் மூலம் அடையாளம் காணப்பட்ட இளைஞரால் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்
Zoom தொழிநுட்பத்தின் ஊடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வழங்கப்பட்ட கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி இந்த இளைஞன் கல்வி கற்கும் போதே நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். சிறுமியிடம் நடத்திய விசாரணையில் இது தெரியவந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் விபத்தில் உயிரிழந்த நிலையில் சிறுமி பார்வையற்ற தாயுடன் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அவரது வீட்டில் வைத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை பொலிசார் கண்டுபிடித்தனர்.
17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் கடந்த 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாக எப்பாவல பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



