மண்டோஸ் சூறாவளி: இலங்கையில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்ட தகவல்

Mayoorikka
1 year ago
மண்டோஸ் சூறாவளி: இலங்கையில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்ட தகவல்

வங்கக்கடலில் உருவாகியிருந்த மாண்டஸ் சூறாவளி கரையை கடந்துள்ளநிலையில், அதன் தாக்கம் காரணமாக இலங்கையில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம்  தெரிவித்துள்ளது.

இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குறைந்தது 13,000 வீடுகள் சேதமடைந்துள்ளன.

பலாங்கொடை மொரஹெல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவர் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போது மரத்தின் கிளை ஒன்று விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில் வானிலையை பொறுத்தவரை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழையுடன் பெய்யும்.

அத்துடன் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் 2.5 மீற்றர் முதல் 3.5 மீற்றர் வரை அலைகள் எழக்கூடும்.

கரையோர கடற்பரப்புகளில் அலைகள் 2.0 மீற்றர் முதல் 2.5 மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!