சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்ரீகர்களுக்கு பொலிஸார் விசேட எச்சரிக்கை
Prabha Praneetha
2 years ago

சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்ரீகர்களுக்கு பொலிஸார் விசேட எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போதைப்பொருளுடன் சிவனொளிபாத மலைக்கு செல்வோரை கைது செய்ய விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் பிரதேச ஊழல் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் இந்த சுற்றிவளைப்புக்கள் மற்றும் தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர்.
போதைப்பொருள் வைத்திருந்த மூன்று பேரை ஹட்டன் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.
இந்த நபர்கள் கஞ்சா மற்றும் சட்டவிரோத புகையிலை உற்பத்திகளை தம்வசம் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது தொடர்பில் 20 முதல் 30 வயது வரையிலான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.



