சந்தேகத்தின் பேரில் சிறை வைக்கப்பட்டுள்ள நீதிமன்ற களஞ்சிய காப்பாளர் பணிக்கு சென்று வரும் அபூர்வ நிகழ்வு

Kanimoli
1 year ago
சந்தேகத்தின் பேரில் சிறை வைக்கப்பட்டுள்ள நீதிமன்ற களஞ்சிய காப்பாளர் பணிக்கு சென்று வரும் அபூர்வ நிகழ்வு

சந்தேகத்தின் பேரில் சிறை வைக்கப்பட்டுள்ள நீதிமன்ற களஞ்சிய காப்பாளர் ஒருவர் விளக்கமறியலில் இருந்தே தமது முன்னைய பணிக்கு சென்று வரும் அபூர்வ நிகழ்வு குறித்து தகவல்  வெளியாகியுள்ளது.
கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தின் களஞ்சியசாலையில் இருந்து ஒரு கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளை திருடிய சந்தேகத்தின் பேரில் களஞ்சியசாலையின் முன்னாள் பாதுகாவலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, குறித்த களஞ்சிய காப்பாளர் பணிக்கு இதுவரை வேறொருவர் நியமிக்கப்படவில்லை.
இந்தநிலையில் விளக்கமறியல் கைதியாக உள்ள முன்னாள் உத்தியோகத்தரே களஞ்சியசாலையில் தொடர்ந்தும் தமது பணியை மேற்கொண்டு வருவதாக தேசிய செய்தித்தாள் ஒன்று, செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, குறித்த சந்தேக நபர் தினமும் சிறைச்சாலை பேரூந்தில் நீதிமன்ற வளாகத்திற்கு சென்று கைவிலங்கின்றி நீதிமன்ற வளாகத்தில் சுற்றித் திரிவதாகவும், மாலையில் சிறைச்சாலை பேரூந்திலேயே சிறைக்கு திரும்பிச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டு;ள்ளது.
அத்துடன் அவர், அதிக நேரம் நீதிமன்ற களஞ்சியசாலையிலேயே கழிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த செய்தியை சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
வழக்குத் தடயப் பொருட்கள் தொடர்பில் நன்கு தெரியும் என்பதனால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை விடுவிக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் அவரை தடயப் பொருட்கள் களஞ்சியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு நீதிமன்ற உத்தரவு கிடைத்துள்ளதாக அவர்; தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துடன் கலந்தாலோசித்த பின்னரே குறித்த முன்னாள் களஞ்சிய காப்பாளரை இந்த நோக்கத்திற்காக பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டதாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, போலியான நீதவான் உத்தரவு ஆவணத்தை சமர்ப்பித்து களஞ்சியசாலையில் இருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்தை ஒருவர் எடுத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அந்தச் செய்தித்தாள் மற்றும் ஒரு தகவலையும் வெளியிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!