பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகளை ஒழிப்பதற்காக கடுமையான சட்டங்களை உடன் அமுல்படுத்த வேண்டும் - ரணில் விக்ரமசிங்க

Kanimoli
1 year ago
பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகளை ஒழிப்பதற்காக கடுமையான சட்டங்களை உடன் அமுல்படுத்த வேண்டும் - ரணில் விக்ரமசிங்க

பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகளை ஒழிப்பதற்காக கடுமையான சட்டங்களை உடன் அமுல்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டமும் நாட்டின் எதிர்காலமும் என்ற தலைப்பிலான விசேட மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதிக்கும் இளைஞர்களுக்கும் இடையிலான மாநாடு அண்மையில் நடைபெற்றது. பகிடிவதைகள் என்பது ஒரு உரிமை அல்ல. இந்த பகிடிவதைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

பல்கலைக்கழகத்திற்கு வரும் மாணவர்களின் உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.இப்போதெல்லாம், பகிடிவதைகள் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.

பகிடிவதை தொடர்பில் பல்கலைக்கழகத்தின் பொறுப்பான திணைக்களங்கள் மௌனமாக இருப்பது தமக்கு ஆச்சரியமளிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையூறாகியுள்ள இந்த பகிடிவதைகளை நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்வார் என நம்புவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!