நாளை பாடசாலைகளை திறப்பது குறித்து இன்று தீர்மானம்

வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் கடந்த வாரம் திடீரென பாடசாலைகளை மூட அரசாங்கள் முடிவு செய்தது.
நாளை (12) பாடசாலைகளை திறப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து இன்று (11) பாடசாலைகளை திறப்பது குறித்து தீர்மானிக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
மோசமான வானிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து அரச மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகள் மற்றும் கத்தோலிக்க பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் விசாரணைகளின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.
அதன்படி நாளை பாடசாலை தொடங்குமா இல்லையா என்பது இன்று அறிவிக்கப்படும்.



