பேராதனை பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் மகன் மீது மாணவர்கள் தாக்குதல்
Prathees
2 years ago

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன, அதே பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது மகனும் தாக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிசார் கூறுகின்றனர்.
நேற்றிரவு, பேராசிரியரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது அவரது மகனின் கார் மோதியதாகக் கூறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு சுமார் 300 மாணவர்கள் அடங்கிய குழு ஒன்று வந்து பேராசிரியரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தி அவரை தாக்கியதை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பின்னர் பொலிசார் அங்கு வந்து மோதலை சமரசம் செய்து கூட்டத்தை கலைத்தனர்.



