பொருளாதாரக் குற்றவாளிகளை கண்டறிய நாடாளுமன்ற தெரிவுக்குழு!
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தவர்களை அடையாளம் காண விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி விக்கிரமசிங்க முன்வைத்த திட்டம் இந்த வாரம், இலங்கையின் அரசியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு பிரிவினர் இந்த யோசனையை விரும்பவில்லை.
இருந்தபோதும் , பொதுமக்கள் அத்தகைய நடவடிக்கையை வரவேற்பார்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
இந்த விசாரணைகளின்போது குற்றவாளிகளை அடையாளம் காண்பது மட்டுமல்லாமல், முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரங்களும், குறித்த குழுவுக்க வழங்க வேண்டும் என்று கொழும்பின் செய்தித்தாள்கள் கோரியுள்ளன.



