மீண்டும் சென்னையில் இருந்து பலாலிக்கு தரையிறங்கிய முதலாவது விமானம்!

Mayoorikka
3 years ago
மீண்டும் சென்னையில் இருந்து பலாலிக்கு தரையிறங்கிய முதலாவது விமானம்!

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னைக்காக விமான சேவைகள் இன்று 12 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகிய நிலையில் சென்னையில் இருந்து புறப்பட்ட முதல் விமானம் பலாலியில்  சற்றுமுன் தரையிறங்கியது.

அதன்படி அலையன்ஸ் எயார்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனம் இன்று திங்கட்கிழமை  முதல் சென்னைக்கு பலாலியில் இருந்து விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

வாரமொன்றுக்கு இந்த விமான சேவை  நிறுவனத்தினால் நான்கு சேவைகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணியொருவர் 20 கிலோ வரை பொருட்களை விமானத்தில் எடுத்துச்செல்லமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பலாலி விமான நிலையப் பணிகள் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று முதல் மீண்டும் விமான சேவை ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4