வெளிநாட்டு பணப்பரிமாற்ற நிறுவனமொன்றின் உரிமத்தை ரத்து செய்த மத்திய வங்கி
Prathees
2 years ago

பிரசன்ன மணி எக்ஸ்சேஞ்ச் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
உரிம நிபந்தனைகளை மீறியதன் காரணமாக குறித்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தை தற்காலிகமாக இடைநிறுத்திய விசாரணையைத் தொடர்ந்து இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிரசன்ன மணி எக்ஸ்சேஞ்ச் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு, அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயப் பரிமாற்றியாக வெளிநாட்டு நாணயங்களை வாங்க, விற்க மற்றும் பரிமாற்றம் செய்ய இனி அனுமதியில்லை என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.



