எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் விசேட அறிவிப்பு

Kanimoli
3 years ago
எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் விசேட அறிவிப்பு

எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. 

இதன்படி, பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிப்பதற்கு தயார் நிலையில் உள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.  

இதற்காக,  34,000 மெட்ரிக் தொன் எரிவாயு முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். 

மேலும், இன்று முதல் 90,000 எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், மற்றுமொரு எரிவாயு கப்பலொன்று நாளையதினம்  நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ தலைவர் தொடர்ந்தும் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4